இந்தப் புத்தகத்தின் பின்னால் ஒரு சின்ன விவரம் இருக்கிறது. சின்னது; ஆனால் எனக்கு அதன் பாதிப்பு அதிகம். ஸாஹித்ய அகாதெமி விருது (1989) எனக்கு என்ற சேதி Tv இல் வந்த அன்றிரவு எனக்குத் தூக்கமில்லை. பரபரப்பு மட்டுமன்று. இன்னும் ஏதோ காத்திருக்கிறது எனும் உள்ளுணர்வு. இது போல எனக்கு நேர்வதுண்டு. அது போன்ற நேரங்கள் எனக்கு எப்பவும் பிடித்தமாயிருந்தன என்று சொல்வதற்கில்லை. விழித்திருந்த அலுப்பிலேயே கண்ணயர்ந்திருக்கிறேன். எந்நேரம் அறியேன். தட்டியெழுப்பினாற்போல் வெடுக்கென விழிப்பு. மூளையுள் ரத்தம் வேகமாய்ப் பாய்வது போல், 'கிர்ர்ர்ர்' - எழுந்து உட்கார்ந்து இரு கைகளிலும் தலையைப் பிடித்துக் கொண்டேன். மண்டைக்குள் ஒரு எண்ணம் மின்னலடித்தது. உன் எழுத்துக்கு நீ முடிவு காணப் போவதில்லை. அதற்கு உனக்கு இனி நேரமில்லை.